| Kannamma
Thy glowing eyes - Kannamma
Are they the sun and the moon?
Thy black eyeballs - Kannamma
Is that the dark hue of the sky?
Glittering diamonds-In
thy dark blue silk sari
Are shining stars - seen
in the middle of the night.
Garden flower's brightness - Is that
thy alluring smile?
Waves of the blue ocean - Are
thy bosom's thoughts.
Enchanting melody of the cuckoo- Is
thy sweet voice.
Innocent girl are you - Kannamma
I am in love with thee.
You talk of tradition - Kannamma
Who needs that?
For those in a hurry - Kannamma
Is tradition a hurdle?
If elders accept - our wedding
Shall happen later.
Can I wait till then - here
Let me kiss you on the cheek.
|
சுட்டும்விழிச்
சுடர்தான்,-
கண்ணம்மா!
சூரிய
சந்திரரோ?
வட்டக்
கரியவிழி,-
கண்ணம்மா!
வானக்
கருமைகொல்லோ?
பட்டுக்
கருநீலப் -
புடவை
பதித்த
நல்வயிரம்
நட்ட
நடுநிசியில்
- தெரியும்
நக்ஷத்தி
ரங்களடீ!
சோலைமல
ரொளியோ - உனது
சுந்தரப்
புன்னகைதான்?
நீலக்கட
லலையே - உனது
நெஞ்சி
லலைகளடீ!
கோலக்குயி
லோசை - உனது
குரலி
னிமையடீ!
வாலைக்
குமரியடீ,-
கண்ணம்மா!
மருவக்
காதல்கொண்டேன்.
சாத்திரம்பேசுகிறாய்,-
கண்ணம்மா!
சாத்திர
மேதுக்கடீ
ஆத்திரங்
கொண்டவர்க்கே,-
கண்ணம்மா!
சாத்திர
முண்டோடீ?
மூத்தவர்
சம்மதியில் -
வதுவை
முறைகள்
பின்புசெய்வோம்;
காத்திருப்
பேனோடீ?- இது
பார்,
கன்னத்து
முத்தமொன்று! |
| Immortality
Did you think I too will
Spend my days in
search of food,
Tell petty tales,
Worry myself with thoughts,
Hurt others by my acts,
Turn senile with grey hair
And end up as fodder to the
relentless march of time
As yet another faceless man?
|
தேடிச்
சோறு
நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு
கதைகள் பேசி-மனம்
வாடித்
துன்பமிக
உழன்று-பிறர்
வாடப்
பலசெயல்கள்
செய்து- நரை
கூடிக்
கிழப்பருவம்
எய்தி -
கொடுங்
கூற்றுக்
கிரையெனப்பின்
மாயும்- பல
வேடிக்கை
மனிதரைப்
போலே-நான்
வீழ்வேனென்று
நினைத்தாயோ |
| A Spark of Fire
A spark of fire did I see
In the forest, I hid it in the hollow of a tree
Burnt to a cinder was the forest.
In its rage, is there
a difference between a spark or a blaze? |
அக்னிக்
குஞ்சொன்று
கண்டேன்
அதை அங்கோர்
காட்டிலோர்
பொந்திடை
வைத்தேன்
வெந்து
தணிந்தது
காடு
தழல்
வீரத்தில்
குஞ்சென்றும்
மூப்பென்றுமுண்டோ. |
| Self Discipline
Things that are visible to me
Won't my hands take them all?
The sky that's visible from earth
Won't that become ours to call?
Thinking forever and trying
hard, will we finally lose?
Tell me O goddess thou who
are the sky, earth, my eyes and numbers.
The Promises, the pride, the successes
So many priveleges!
Control over self shall
get these and more
told the wise men of yore
in the scriptures.
Yet will we stand low
failing to control our self? |
கண்ணில்
தெரியும்
பொருளினைக்
கைகள்
கவர்ந்திட
மாட்டாவோ?-அட
மண்ணில்
தெரியுது
வானம்,அதுநம்
வசப்பட
லாகாதோ?
எண்ணி
யெண்ணிப்பல
நாளு
முயன்றிங்
கிறுதியிற்
சோர்வோமோ?-அட,
விண்ணிலும்
மண்ணிலும்
கண்ணிலும்
எண்ணிலும்
மேவு
ப்ராசக்தியே!
என்ன
வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை
மேன்மைகளோ!
தன்னை
வென்றாலவை
யாவும்
பெறுவது
சத்திய
மாகுமென்றே
முன்னை
முனிவர்
உரைத்த
மறைப்
பொருள்
முற்றுமுணர்ந்த
பின்னும்
தன்னை
வென்றாளும்
திறமை
பெறாதிங்கு
தாழ்வுற்று
நிற்போமோ? |
| I
I am all the sky's buzzing bees
I am all the earth's roaming animals
I am all the forest's tall shady trees
I am the air, the floods and the sea.
I am all the stars seen in space
I am all the wide earth's expanse
I am all the earth's wiggly worms
I am all the earth's life forms.
I am all of Kamban's verses.
I am all of painter's images.
I am all the dazzling homes
And all this city's breathtaking domes.
I am the music in all those choirs
I am the strand of bliss in all life's.
I am the lies in all those sinners
I am the agony of all those deaths.
I am the magician of million illusions
I am the essence of all things real
I am the trickster with a bag of tricks
I am the author of all the learned tomes.
I am the creator of all the galaxies
I am the director who makes them work flawlessly.
I am all the army of the Goddess
I am all the reason behind rationality.
I am the creator of the illusion that's me.
I am the traveler in the path of wisdom
I am the flame of unifying knowledge
in all things ever created. |
வானிற்
பறக்கின்ற
புள்ளெலாநான்
மண்ணிற்
றிரியும்
விலங்கெலாநான்
கானிழல்
வளரு
மரமெலாநான்
காற்றும்
புனலுங்
கடலுமேநான்.
விண்ணிற்
றெரிகின்ற
மீனெலாநான்
வெட்ட
வெளியின்
விரிவெலாநான்
மண்ணிற்
கிடக்கும்
புழுவெலாநான்
வாரியி
லுள்ள
வுயிரெலாநான்.
கம்ப
னிசைத்த
கவியெலாநான்
காருகர்
தீட்டு
முருவெலாநான்
இம்பர்
வியக்கின்ற
மாட கூடம்
எழினகர்
கோபுரம்
யாவுமேநான்.
இன்னிசைமாத
ரிசையுளேனான்
இன்பத்
திரள்க
ளனைத்துமேநான்
புன்னிலை
மாந்தர்தம்
பொய்யெலாநான்
பொறையருந்
துன்பப்
புணர்ப்பெலாநான்.
மந்திரங்
கோடி
யியக்குவோனான்
இயங்கு
பொருளி
னியல்பெலாநான்
தந்திரங்
கோடி
சமைத்துளோனான்
சாத்திர
வேதங்கள்
சாற்றினோனான்.
அண்டங்கள்
யாவையு
மாக்கினோனான்
அவைபிழை
யாமே
சுழற்றுவோனான்
கண்டநற்
சக்திக்
கணமெலாநான்
காரண மாகிக்
கதித்துளோனான்.
நானெனும்
பொய்யை
நடத்துவோனான்
ஞானச்
சுடர்வானிற்
செல்லுவோனான்
ஆன பொருள்க
ளனைத்தினு
மொன்றாய்
அறிவாய்
விளங்கு
முதற்சோதி
நான். |
| Kannan my lover
My beloved's face is forgotten - to
whom shall I covey this my friend?
The heart hasn't forgotten his love - then
can the face be forgotten?
In my eyes there is an image - but
his splendor isn't complete.
When I recollect his face - that
enchanting smile is not there.
My heart, without a rest,
thinks only of his love.
My mouth, wihout a break,
talks of that charmer's praise.
My eyes committed a sin - and
I started forgetting his face.
In the entire womankind - have
you ever seen a dumb girl as me?
A bee that forgot the honey - or
A flower that forgot its radiance
Or a crop that forgot the rain - are
Not there in this whole world, my friend.
If they forgot his face - what
is the use of these eyes, my friend?
I don't even have his portrait - then
how am I to live my friend?
|
ஆசை
முகமறந்து
போச்சே - இதை
ஆரிடம்
சொல்வேனடி
தோழி?
நேச
மறக்கவில்லை
நெஞ்சம் -
எனில்
நினைவு
முகமறக்க
லாமோ?
கண்ணில்
தெரியுதொரு
தோற்றம் -
அதில்
கண்ண னழகு
முழுதில்லை;
நண்ணு
முகவடிவு
காணில் - அந்த
நல்ல
மலர்ச்சிரிப்பைக்
காணோம்.
ஓய்வு
மொழிதலுமில்
லாமல் - அவன்
உறவை
நினைத்திருக்கு
முள்ளம்;
வாயு
முரைப்பதுண்டு
கண்டாய் -
அந்த
மாயன்
புகழினையெப்
போதும்.
கண்கள்
புரிந்துவிட்ட
பாவம் -
உயிர்க்
கண்ண
னுருமறக்க
லாச்சு;
பெண்க
ளினத்திலிது
போலே - ஒரு
பேதையை
முன்புகண்ட
துண்டோ?
தேனை
மறந்திருக்கும்
வண்டும் -
ஒளிச்
சிறப்பை
மறந்துவிட்ட
பூவும்
வானை
மறந்திருக்கும்
பயிரும் -
இந்த
வைய
முழுதுமில்லை
தோழி.
கண்ணன்
முகமறந்து
போனால் -
இந்தக்
கண்க
ளிருந்துபய
னுண்டோ?
வண்ணப்
படமுமில்லை
கண்டாய் - இனி
வாழும்
வழியென்னடி
தோழி? |
| Nandhalala
In the black bird's feathers I see nandhalala - Thy
dark hue is visible nandhalala.
In all those trees I see nandhalala - Thy
greenish hue is visible nandhalala.
In all those notes I hear nandhalala - Thy
melody is heard nandhalala.
On placing my fingers in the fire nandhalala - Thy
warm bliss spreads over me nandhalala.
|
காக்கைக்
சிறகினிலே
நந்தலாலா -
நின்றன்
கரியநிறந்
தோன்றுதையே
நந்தலாலா;
பார்க்கு
மரங்களெல்லாம்
நந்தலாலா -
நின்றன்
பச்சைநிறந்
தோன்றுதையே
நந்தலாலா;
கேட்கு
மொலியிலெல்லாம்
நந்தலாலா -
நின்றன்
கீத
மிசைக்குதடா
நந்தலாலா;
தீக்குள்
விரலைவைத்தால்
நந்தலாலா -
நின்னைத்
தீண்டுமின்பந்
தோன்றுதடா
நந்தலாலா. |
| From his Autobiography
Inside this world that is a dream,
life of the rebellious human insect
that eats, sleeps, disturbs and dies
is a dream within a dream. |
உலகெ லாமொர்
பெருங்கன
வஃதுளே
உண்டு றங்கி
யிடர்செய்து
செத்திடும்
கலக மானிடப்
பூச்சிகள்
வாழ்க்கையோர்
கனவி லுங்கன
வாகும் |
| Nalladhor Veenai Seidhe
Having crafted a wonderful Veena - will thou
spoil and consign it to dust?
Tell O' Goddess - I have
been created with wisdom by thee,
Won't you give me the strength - for me
to live a life fruitful to this land?
Tell me O' Goddess - will thou
make me live as a burden off this land?
Like a swiftly thrown ball - a body
ready to spring on brain's command I ask.
Spotless mind I ask - a life
born anew daily I ask.
Even when the skin is on fire - a heart
that sings thy praise I ask.
Unshakeable wisdom I ask - Is there
anything that stops thee from bestowing these? |
நல்லதோர்
வீணை செய்தே -
அதை
நலங்கெடப்
புழுதியி
லெறிவ
துண்டோ?
சொல்லடி
சிவசக்தி! -
எனைச்
சுடர்மிகு
மறிவுடன்
படைத்து
விட்டாய்,
வல்லமை
தாராயோ, - இந்த
மாநிலம்
பயனுற
வாழ்வதற்கே?
சொல்லடி,
சிவசக்தி! -
நிலச்
சுமையென
வாழ்ந்திடப்
புரிகுவையோ?
விசையுறு
பந்தினைப்போல்
- உள்ளம்
வேண்டிய
படிசெலும்
உடல்கேட்டேன்,
நசையறு
மனங்கேட்டேன்,
- நித்தம்
நவமெனச்
சுடர்தரும்
உயிர்கேட்டேன்,
தசையினைத்
தீசுடினும் -
சிவ
சக்தியைப்
பாடுநல்
லகங்கேட்டேன்,
அசைவறு
மதிகேட்டேன்;-
இவை
அருள்வதில்
உனக்கெதுந்
தடையுளதோ? |
| Kannamma My love
On the river bank - If I wait
in the flower garden at the southern corner
you'll come you said - with your
friend when the moon is high.
You have broken your promise - Kannamma
my heart beats hard for you.
Wherever I look - I see images
just like you.
My body's burning - my head
is spinning with pain
All over the sky - see how
this moon is embracing her lover
Everything is silent - This
entire world is asleep Kannamma - Why
should I alone suffer this hell
called separation?
It is very hard - the guards are
always there in your palace.
Even after the slaves enter - I can't
come in whenever I want.
I can't stand this torture - full of
restrictions and guards over there.
Impartial queen are thee - then
Why are you shy to see me?
To meet together - the entire night
spent cuddling amorously-to
embrace you a million times,
fulfill my heart's desire - and
beam with pleasure singing
blissful songs - I haven't
been blessed to do that Kannamma. |
தீர்த்தக்
கரையினிலே -
தெற்கு
மூலையில்
செண்பகத்
தோட்டத்திலே,
பார்த்திருந்தால்
வருவேன் -
வெண்ணிலாவிலே
பாங்கியோ
டென்று
சொன்னாய்.
வார்த்தை
தவறிவிட்டாய்
- அடி
கண்ணம்மா!
மார்பு
துடிக்கு
தடீ!
பார்த்த
விடத்திலெல்லாம்
-
உன்னைப்போலவே
பாவை தெரியு
தடீ! ... 1
மேனி
கொதிக்கு
தடீ! - தலை
சுற்றியே
வேதனை
செய்கு தடீ!
வானி
லிடத்தை
யெல்லாம் -
இந்த
வெண்ணிலா
வந்து
தழுவுது
பார்!
மோனத்
திருக்கு
தடீ! இந்த
வையகம்
மூழ்கித்
துயிலினிலே,
நானொருவன்
மட்டிலும் -
பிரி
வென்பதோர்
நகரத்
துழலுவதோ? ... 2
கடுமை யுடைய
தடீ! - எந்த
நேரமும்
காவலுன்
மாளிகையில்;
அடிமை
புகுந்த
பின்னும் -
எண்ணும்போது
நான்
அங்கு
வருவதற்
கில்லை;
கொடுமை
பொறுக்க
வில்லை -
கட்டுங்
காவலும்
கூடிக்
கிடக்கு
தங்கே;
நடுமை யரசி
யவள் -
எதற்காகவோ
நாணிக்
குலைந்திடுவாள்.
... 3
கூடிப்
பிரியாமலே -
ஓரி ரவெலாம்
கொஞ்சிக்
குலவி யங்கே,
ஆடி விளை
யாடியே, -
உன்றன்
மேனியை
ஆயிரங்கோடி
முறை
நாடித்
தழுவி மனக் -
குறை
தீர்ந்து
நான்
நல்ல களி
யெய்தியே,
பாடிப்
பரவசமாய் -
நிற்கவே
தவம்
பண்ணிய
தில்லை யடி! ...4 |
| Flute
From where does this music rise - who
composed this melody- my friend?
Is it from that hillock? - or
from the boughs of this tree? - or
from the expanse of space? - makes
me lose my posture - this music.
The resounding waves of - divine Yamuna
river, is it from there? Or
the rustling leaves of the grove,
does this rise from there like nectar?
Is this from the forests? - Is it
the moon's breeze?- Does this song
waft from lands across the oceans?
This melody's melting my heart.
Is there any bird - that
sings this elixir like song?
Or is this the music of invisible elfs
playing their divine instruments?
Kannan's melodious flute is this,
elixir on my ears, poison in my heart
This is not a song but a dart
to pierce the heart of his lover, my friend
|
எங்கிருந்து
வருகு வதோ? -
ஒலி
யாவர்
செய்கு வதோ? -
அடி தோழி!
குன்றி
னின்றும்
வருகுவதோ? -
மரக்
கொம்பி
னின்றும்
வருகுவதோ? -
வெளி
மன்றி
னின்று
வருகுவதோ? -
என்றன்
மதி
மருண்டிடச்
செய்குதடி! - இ·து,
(எங்கிருந்து)
அலையொ
லித்திடும்
தெய்வ - யமுனை
யாற்றினின்றும்
ஒலிப்பதுவோ? -
அன்றி
இலையொ
லிக்கும்
பொழிலிடை
நின்றும்
எழுவதோ இ·தின்ன
முதைப்போல்? (எங்கிருந்து)
காட்டி
னின்றும்
வருகுவதோ? -
நிலாக்
காற்றைக்
கொண்டு
தருகுவதோ? -
வெளி
நாட்டி
னின்றுமித்
தென்றல்
கொணர்வதோ?
நாதமி·தென்
உயிரை
யுருக்குதே! (எங்கிருந்து)
பறவை
யேதுமொன்
றுள்ளதுவோ? -
இங்ஙன்
பாடுமோ
அமுதக்கனற்
பாட்டு?
மறைவினின்றுங்
கின்னர
ராதியர்
வாத்தியத்தினிசை
யிதுவோ அடி! (எங்கிருந்து)
கண்ண
னூதிடும்
வேய்ங்குழல்
தானடீ!
காதி லேயமு
துள்ளத்தில்
நஞ்சு,
பண்ணன்
றாமடி
பாவையர்
வாடப்
பாடி
யெய்திடும்
அம்படி தோழி! (எங்கிருந்து) |
| All that's gone is not
gonna come back
All that's gone is not gonna comeback, bugger - Don't
be lookin back at what's gone and think
and worry yourself silly to death.
Don't remember all that's past.
Refine your thoughts, think
you are born anew today - grab your
grub, play and enjoy your life.
All that crap is gone, not gonna come back. |
சென்றதினி
மீளாது
மூடரே!நீர்
எப்போதும்
சென்றதையே
சிந்தை
செய்து
கொன்றழிக்கும்
கவலையெனும்
குழியில்
வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக்
குறித்தல்
வேண்டாம்.
இன்றுபுதி
தாய்ப்பிறந்தோம்
என்று
நீவிர்
எண்ண மதைத்
திண்ணமுற
இசைத்துக்
கொண்டு
தின்றுவிளை
யாடியின்புற்
றிருந்து
வாழ்வீர்;
தீமையெலாம்
அழிந்துபோம்,திரும்பி
வாரா.
|
| Resolute Mind I seek
Resolute mind I seek
Refined words I seek
Considerate thoughts I seek
Coveted things to be mine I seek
Dreams that turn real I seek
And turn real soon I seek
Wealth and happiness I seek
Fame in this world I seek
Clarity of vision I seek
Determination in work I seek
Women's liberation I seek
Protection of the creator I seek
Growth of this land I seek
Vision of heaven I seek
Triumph of truth I seek
Om Om Om Om
|
மனதி லுறுதி
வேண்டும்,
வாக்கினி
லேயினிமை
வேண்டும்;
நினைவு
நல்லது
வேண்டும்,
நெருங்கின
பொருள்
கைப்பட
வேண்டும்;
கனவு
மெய்ப்பட
வேண்டும்,
கைவசமாவது
விரைவில்
வேண்டும்;
தனமும்
இன்பமும்
வேண்டும்,
தரணியிலே
பெருமை
வேண்டும்.
கண்
திறந்திட
வேண்டும்,
காரியத்தி
லுறுதி
வேண்டும்;
பெண்
விடுதலை
வேண்டும்,
பெரிய
கடவுள்
காக்க
வேண்டும்,
மண் பயனுற
வேண்டும்,
வானகமிங்கு
தென்பட
வேண்டும்;
உண்மை
நின்றிட
வேண்டும்.
ஓம் ஓம் ஓம்
ஓம். |
| An acre of land
An acre of land do I want - Goddess
An acre of land do I want - There
with carved pillars - balconies
painted in pristine white - In that
acre of land - such a house
do I need to be built - with
coconut trees hugging the well - ripe
with tender coconuts.
A dozen or so - Coconut trees
do I want nearby - like
the shine of flawless pearl - moonlight
do I want to be with me, the cooing
of the cuckoo - do I want to
grace my ears - to make
my soul happy - soft, gentle
breeze should be there too.
To sing songs of pleasure - there
I want a chaste damsel with me - In
our joyous union - verses
should flow freely - In
that sylvan locale - Goddess! Your
benign presence I need - With my
poetic abilities - should
this world be graced. |
காணி நிலம்
வேண்டும் -
பராசக்தி
காணி நிலம்
வேண்டும், -
அங்கு
தூணில்
அழகியதாய் -
நன்மாடங்கள்
துய்ய
நிறத்தினதாய்
- அந்தக்
காணி
நிலத்தினிடையே
- ஓர்மாளிகை
கட்டித்
தரவேண்டும் -
அங்கு
கேணியருகினிலே
- தென்னைமரம்
கீற்று
மிளநீரும்.
பத்துப்
பன்னிரண்டு -
தென்னைமரம்
பக்கத்திலே
வேணும் - நல்ல
முத்துச்
சுடர்போலே -
நிலாவொளி
முன்பு
வரவேணும்,
அங்கு
கத்துங்
குயிலோசை -
சற்றே வந்து
காதிற்
படவேணும், -
என்றன்
சித்தம்
மகிழ்ந்திடவே
- நன்றாயிளந்
தென்றல்
வரவேணும்.
பாட்டுக்
கலந்திடவே -
அங்கேயொரு
பத்தினிப்
பெண்வேணும் -
எங்கள்
கூட்டுக்
களியினிலே -
கவிதைகள்
கொண்டுதர
வேணும் -
அந்தக்
காட்டு
வெளியினிலே -
அம்மா!
நின்றன்
காவலுற
வேணும், -
என்றன்
பாட்டுத்
திறத்தாலே -
இவ்வையத்தைப்
பாலித்திட
வேணும்.
|
| Song of Valli
Every moment my longing for you
is on the rise, you nifty Valli
Right now, in this foot hills
along the river bank shall I join you - In your
patriotic tamil songs shall
my heart burst with pleasure - In the
mass of your dark tresses, glistening lips,
slopes of your bosom, with love - shall I
embrace you and find the pleasure
of immortality here and now.
The white moon spreading its rays
covering the sky, you see - In this
well lit night, to join you in lustful union
and become one with you - lose my
mind amidst your smooth curves
and forget everything else - oh my
clear wise love - to blend as one
with you do I wish, you see.
Like the boat that goes round and round
wihtout leaving the pond ever - to not
leave you, but tease you here and there
without leaving your body for a moment - Oh
my sweetheart, with a face as radiant as
the daybreak's sun - to kiss you,
shower more kisses on you and again
to kiss and mingle with you did I come. |
எந்த
நேரமும்
நின் மையல்
ஏறுதடீ
குறவள்ளீ,
சிறு கள்ளி!
(இந்த)
நேரத்தி
லேமலை
வாரத்தி
லேநதி
யோரத்தி
லேயுனைக்
கூடி -நின்றன்
வீரத்
தமிழ்ச்
சொல்லின்
சாரத்தி
லேமனம்
மிக்க
மகிழ்ச்சிகொண்
டாடி - குழல்
பாரத்தி
லேஇத
ழீரத்தி
லேமுலை
யோரத்திலே
அன்பு சூடி -
நெஞ்சம்
ஆரத் தழுவி
அமர நிலை
பெற்றதன்
பயனை யின்று
காண்பேன். (எந்த
நேரமும்)
வெள்ளை
நிலாவிங்கு
வானத்தை
மூடி
விரிந்து
மொழிவது
கண்டாய் -
ஒளிக்
கொள்ளை
யிலேயுனைக்
கூடி
முயங்கிக்
குறிப்பிணி
லேயொன்று
பட்டு -
நின்றன்
பிள்ளைக்
கிளிமென்
குதலியி
லேமனம்
பின்ன மறச்
செல்லவிட்டு
- அடி
தெள்ளிய
ஞானப்
பெருஞ்செல்வ
மே! . நினைச்
சேர
விரும்பினன்
கண்டாய். (எந்த
நேரமும்)
வட்டங்க
ளிட்டுங்
குளமக லாத
மணங்ப்பெருந்
தெப்பத்தைப்
போல - நினை
விட்டு
விட்டுப்பல
லீலைகள்
செய்து நின்
மேனி தனைவிட
லின்றி - அடி
எட்டுத்
திசையும்
ஒளிர்ந்திடுங்
காலை
இரவியைப்
போன்ற
முகத்தாய்! -
முத்தம்
இட்டுப்
பலமுத்த
மிட்டுப்
பலமுத்தம்
இட்டுனைச்
சேர்ந்திட
வந்தேன். (எந்த
நேரமும்)
|
| In this breezy expanse,
Kannamma
In this breezy expanse Kannamma - I
feel blissful thinking of your love- Luscious
lips like a fount of honey -Moon
like eyes with serenity - Gold
like skin shining with brilliance - in this
world till I live - these will absorb
me, thinking of nothing else - make me
feel like a celestial being.
You are my life Kannamma - I will
sing thy praise every moment
All my sadness, my sorrows vanish - When
I see the lustre of your presence
I feel the nectar of love in my lips - when
I whisper thy name Kannamma
You're the light lit by the fire of my soul
You're my thought, my purpose in life.
|
காற்று
வெளியிடைக்
கண்ணம்மா, -
நின்றன்
காதலை
யெண்ணிக்
களிக்கின்றேன்
- அமு
தூற்றினை
யொத்த
இதழ்களும் -
நில
வூறித்
ததும்பும்
விழிகளும் -
பத்து
மாற்றுப்பொன்
னொத்தநின்
மேனியும் -
இந்த
வையத்தில்
யானுள்ள
மட்டிலும் -
எனை
வேற்று
நினைவின்றித்
தேற்றியே -
இங்கோர்
விண்ணவ
னாகப்
புரியுமே!
இந்தக் (காற்று)
நீயென
தின்னுயிர்
கண்ணம்மா! -
எந்த
நேரமும்
நின்றனைப்
போற்றுவேன் -
துயர்
போயின, போயின
துன்பங்கள்
நினைப்
பொன்னெனக்
கொண்ட
பொழுதிலே -
என்றன்
வாயினி
லேயமு
தூறுதே -
கண்ணம்
மாவென்ற
பேர்சொல்லும்
போழ்திலே -
உயிர்த்
தீயினி
லேவளர்
சோதியே -
என்றன்
சிந்தனையே,
என்றன்
சித்தமே! -
இந்தக் (காற்று) |
1) Agni and other poems and translations and essays and other prose fragments. Madras: Bharati Prachur Alayan, 1937. 10, 55, 67 p.; 2nd ed. Madras: A. Natarajan, 1980. xii, 147 p.
2) Bharathi's poems (Kannan and Kuyil pattu). trans. by A.D. Durai- svami Pillai. Madras: New Century, 1966. x, 75 p.
3) Bharati in English verse. Trans. by Prema Nandakumar. Madras: Porunai Publ., 1958. 110 p.
4) Bharatiyar's works in Sanskrit. With English trans. by S.N. Sri-rama Desikan. Madras: Srirama Desikan, 1982. xiv, ii, 170, 167, 127 p. In Tamil with English and Sanskrit.
5) Panchali sapatham: the vow of Panchali. Trans. by Mrs. H. Valam. Devalali, Bombay State: the trans., 1957. viii, 137 p.
6) Poems of Subramani Bharati. Trans. by P.S. Sundaram. Delhi: Vikas , 1982. viii, 148 p.
7) Poems of Subramania Bharati: a selection in an English verse rendering. Trans. by Prema Nandakumar. New Delhi: Sahitya Akademi, 1977. 232 p.; 2nd ed. New Delhi: Sahitya Akademi, 1982. viii, 168 p.
8) Poems, Subramania Bharati: a selection from Bharati's poems in Tamil original, roman transcription and English translation. Edited by Indira Arjun Dev, Santo Datta and Arjun Dev. ?:?, 1982. xv, 158 p.
9) Poems. Selected by Prema Nand Kumar. Delhi: Sahitya Akademi, 1978 . 134 p.
10) Selections from C. Subramania Bharati. Edited by A. Pushparatham and P.B. Vyapoory. Mauritius: Mahatma Gandhi Institute, 1982. 43 p.
11)Shakthi and other poems. Trans. by K.G. Seshadri. Thanjavur: T.R. N. Memorial Library, 1983. 111, 56 p.
12)Songs to Krishna. Trans. by David Bunce. Calcutta: Writers Workshop, 1973. 40 p.
13)Subramania Bharati: chosen poems and prose: English renderings of a selection from the Tamil writings of Subramania Bharati. Edited by K. Swaminathan. New Delhi: All-India Subramania Bharati Centenary Celebrations Committee, 1984. xi, 432 p.
14)That little sparrow: poems. Selected & trans. by Nakulan. Madras: Zha Publications, 1982. 63 p.
15)The oath of Draupadi: Paanchaali sapatam. trans. by T.N. Ramachandran. Thanjavur: T.R.N. Memorial Library and Publications, 1982. viii, 319 p. English-Tamil text.
16)The selected poems of Subramania Bharati. Trans. by Krishna Srinivas. Madras: Poet Press India, 1979. 63 p.
17)The song of the cuckoo and other poems. Trans. by Hephzibah Jesudan. Trivandrum: the translator, 1950. x, 122 p.
18)The song of the Kuyil: and English rendering of Mahakavi Bharati' s Kuyil paattu. Trans. by T.N. Ramachandran. Thanjavur: T.R.N. Memorial Library and Publications, 1980. 73 p.
19)The sun and the stars: prose poems. Trans. by P. Raja. Sivaganga: Annam, 1982. 66 p.
20)The voice of a poet: English renderings of Bharati's verse. Trans . by C. Rajagopalachari. Edited by Srinivasa Raghavan. Calcutta: Bharati Tamil Sangam, 1951. xi, 46 p.; 2nd ed. Calcutta: Tamil Sangam, xxii, 67 p.; 3rd ed. Calcutta: Bharati Tamil Sangam, 1975.; 4th ed. Calcutta: Bharathi Tamil Sangham, 1982. 159 p.
21)The vow of Panchali: being English translation of amarakavi Subhramanya Bharati's Tamil Panchali sapatham. Trans. by Ha. Ki. Valam. 2nd rev. ed. Madras: Mohana Trust Pathippagam, 1972. xxiv, 127 p.
22)Bharati as a translator: a centenary release. Comp. by C. Visvanathan. Sivagangai: Annam, 1982. 72 p.
|